Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூம் பாய்: விமர்சனம்

பள்ளி படிப்பை முடித்த நிகில், ஏலகிரி நட்சத்திர ஓட்டலில் ஹவுஸ்கீப்பராக வேலைக்கு சேருகிறார். திடீரென ஓட்டல் மேனேஜர் கொல்லப்படுகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, ஓட்டல் உரிமையாளரின் உதவியாளரும் படுகொலை செய்யப்படுகிறார். அவர்களை கொன்றது யார்? அதற்கான பின்னணி என்ன என்பது மீதி கதை. ஹவுஸ்கீப்பராக இருந்து ரூம் பாயாக மாறும் புது ஹீரோ சி.நிகில், காதல் மற்றும் தங்கை சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தி பெண்ணாக வரும் ஹர்ஷா அழகாக இருக்கிறார். காத்து கருப்பு கலையின் காமெடி பரவாயில்லை. மும்பை மாடல் நிதி மரோலி கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.

இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு பொருந்தியுள்ளனர். ‘ஏழைகளின் ஊட்டி’ ஏலகிரியை கண்முன் கொண்டு வந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் சி.பாரதிராஜன். வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ஓ.கே. திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ளார். பல படங்களில் சொல்லப்பட்ட கள்ளக்காதல், இதில் புது ரகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கொலைக்கான காரணங்களும், பழிவாங்கும் கதையும், இதை ஒரு வழக்கமான படமாகவே கடந்து செல்ல வைக்கிறது.