Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தனுஷ் படத்தை நிராகரித்த ருக்மிணி வசந்த்

சென்னை: ‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், தனுஷ். இதையடுத்து ‘அமரன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனது 55வது படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதையடுத்து டான் பிக்சர்ஸ் தயாரிக்க, ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கும் படத்தில், தனது 56வது படமாக தனுஷ் நடிக்கிறார்.

மதுரையை மையப்படுத்திய கதை கொண்ட இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது. தனுஷ் ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘லப்பர் பந்து’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருக்கான டெஸ்ட் ஷூட் நடந்தது. அவர் தனுஷுக்கு ஜோடியா அல்லது வேறொரு முக்கிய வேடமா என்பது குறித்து தெரியவில்லை.