Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வதந்திகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருது: பூஜா ஹெக்டே கலகல பேட்டி!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தன்னைச் சுற்றியும் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பரவும் வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், சினிமா வட்டாரங்களில் தன்னைப்பற்றி உலா வரும் வம்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தனக்குத் தெரியாத பல விஷயங்கள் தன்னைப்பற்றி எப்படி வெளியில் வருகின்றன என்று நினைத்தால் கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வருகிறது என்று பூஜா கலகலப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவற்றை எளிதில் கடந்து செல்வதே தனது வழக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் 'ஸ்ரீ ஸ்ரீ' படத்தில் நடித்து வருகிறார். தற்போது பூஜா ஹெக்டேவின் இந்த கலகலப்பான மற்றும் பாசிட்டிவான பதில்கள் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.