Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்மார்ட்போனுக்கு ‘குட் பை’ சொன்ன சாய்

‘கட்சி சேரா’, ‘ஆச கூட’, ‘சித்திர புத்திரி’, ‘விழி வீக்குற’, ‘பவழ மல்லி’ ஆகிய ஆல்பங்களின் மூலம் பிரபலமான சாய் அப்யங்கர், ‘டியூட்’ படத்தின் ஹிட்டுக்கு பிறகு பிசியாகி விட்டார். தற்போது ‘ராக்கா’, ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம் மற்றும் விஜய் சேதுபதி, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் அவர் கூறுகையில், ‘என்னிடம் 1000க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கின்றன. 6ம் வகுப்பில் இருந்தே எழுதி வந்தேன். 60 வயதுக்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டால், உடனே அந்த பாடல்களை பயன்படுத்துவேன். 1,000 பாடல்களில் எது சிறந்ததோ அதை மட்டும் பயன்படுத்துவேன்.

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, ஒரு சாதாரண பட்டன் செல்போனையே பயன்படுத்துகிறேன். சோஷியல் மீடியாவில் தேவையானதும், தேவையில்லாததும் கிடைக்கின்றன. அவற்றை பார்த்தாலோ, படித்தாலோ தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால்தான் சாதாரண போனை பயன்படுத்துகிறேன். இதில்தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை அழைத்து பேசுகின்றனர். எனவே, ஸ்மார்ட்போனை நான் பயன்படுத்துவது இல்லை’

என்றார்.