Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலிவுட்டில் தோல்வியடைந்த சாய் பல்லவி

பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர் கான் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக அறிமுகமான இந்தி படம், ‘ஏக் தின்’. ஹீரோயினாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்துக்காக ஆமிர் கான் தானாக முன்வந்து நிறைய புரமோஷன் செய்தார். எனினும், இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. வார இறுதியில் இப்படம் மொத்தமாக 3 கோடி ரூபாயை கூட வசூலிக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியான சில நாட்களிலேயே வசூல் இப்படி என்பதால், இன்று முதல் அதைவிட குறைவாகவே இருக்கும் என்கின்றனர். கடந்த 2016ல் திரைக்கு வந்த தாய்லாந்து மொழி படமான ‘ஒன் டே’ என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. மிகவும் மெதுவான திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று தெரிகிறது. இது பாலிவுட்டில் சாய் பல்லவியின் அறிமுக படம் என்றாலும், அவருக்கு பலத்த ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.