சென்னை: நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’. இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் சண்டைக் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம்.சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
