Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல இடங்களுக்கு ஜோடியாக உலா இயக்குனருடன் சமந்தா காதல்

சென்னை: நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். இதன்பின் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது. ஆனால், தற்போது பிரபல இயக்குநருடன் நடிகை சமந்தா டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. நடிகை சமந்தா தற்போது உலக பிக்கிள்பால் லீக்கில் சென்னை சூப்பர் சாம்ப்ஸ் என்கிற அணியை வாங்கியுள்ளார்.

தனது அணி பங்கேற்கும் போட்டிகளில் சமந்தாவின் கலந்துகொண்டு, அணிக்கு உற்சாகமளித்து வருகிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வெளிவந்த புகைப்படங்களில், சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் சமந்தா கைகோர்த்து நிற்கும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், ‘இருவரும் காதலிக்கிறார்களா’ என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பல இடங்களில் இவர்கள் ஒன்றாக செல்கிறார்கள். இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதுவரை இது தொடர்பாக இருவரும் பதில் அளிக்காமல் இருக்கிறார்கள்.