Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சித்தால் பிளாக் செய்துவிடுவேன்: சமந்தா எச்சரிக்கை

சென்னை: சமூக வலைத்தளத்தில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்துவிடுவதாக சமந்தா எச்சரித்துள்ளார். இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளிக்கிறார் சமந்தா. ரசிகர் ஒருவர், எதிர்மறை விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, ‘‘எந்த வினைக்கும் எதிர்வினை இருக்கும். விமர்சனங்கள் விமர்சன ரீதியாக மட்டுமே இருந்தால் அதில் தவறில்லை.

சிலர், அத்துமீறி விமர்சனம் பெயரில் இழிவான சொற்களை பயன்படுத்துவார்கள். சிலரது கருத்துகளால் அது நமது குடும்பம் வரை சென்று அசாதாரண சூழலை ஏற்படுத்தும் என்ற நிலை வந்தால் அந்த நபரை நான் பிளாக் செய்துவிடுவேன். இதற்காக நான் அவரை நிராகிரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. வீணான விஷயங்களை தவிர்க்கிறேன் என்றுதான் அர்த்தம்’’ என கூறியுள்ளார்.