Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகேஷ்பாபு ஜோடியாகும் சம்யுக்தா

தெலுங்கில் மகேஷ்பாபுவின் புதிய படமான குண்டூர் காரம் படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இடையில் மகேஷ்பாபுவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில துக்கமான நிகழ்வுகளால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் அடிக்கடி தள்ளிப்போனது.

இதனால் ஏற்பட்ட கால்சீட் குளறுபடி காரணமாக தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அவர் மட்டுமல்ல இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் கூட சில காரணங்களால் விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக நடிகை சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.