Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சம்யுக்தா மேனனின் புதிய திட்டம்

தென்னிந்திய படவுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி வருபவர், சம்யுக்தா மேனன். கடந்த ஆண்டு பாலகிருஷ்ணா ஜோடியாக ‘அகண்டா 2: தாண்டவம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த அவர், தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இளம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பது ஒன்றே எனது இலக்கு. அதை மனதில் கொண்டே படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இதுபோன்ற மனநிலை அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரையில், நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. நடிக்கும் படங்கள் அனைத்திலும் எனது தடத்தை பதிக்க வேண்டும் என்பதே நோக்கம். விரைவில் நிறைய தமிழ்ப் படங்களில் நடிப்பேன்’ என்றார்.