Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சந்தானத்துடன் இணைந்த அபர்ணா தாஸ்

கடந்த ஆண்டு வெளியான `டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்துக்கு பிறகு சந்தானம் நடிக்கும் படம், ‘லவ் பைட்’. காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமான செல்வின் ராஜ் சேவியர் ‘லவ் பைட்’ படத்தை இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார். தவிர விடிவி கணேஷ், ஆதித்யா கதிர், ஆனந்தராஜ், பிஜோர்ன் சுராவ், ராஜேந்திரன், முத்துக்குமார், நிரோஷா, ரெடின் கிங்ஸ்லி, கல்கி ராஜா நடிக்கின்றனர்.

சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ போல் இதுவும் ஹாரர் காமெடி படமாக இருக்கும் என்று தெரிகிறது. அடுத்து சுதாமன் கிருஷ்ணா இயக்கும் டைம்-லூப் திரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம், பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஹீரோவுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சிம்பு தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தினார் என்ற நன்றிக்கடனுக்காகவே சந்தானம் ஒப்புக்கொண்டார்.