டிடி நெக்ஸ்ட் லெவலில் சந்தானம்
சென்னை: சந்தானம், சுரபி நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் உருவாகிறது. இதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைக்கிறார்.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரிக்கின்றனர். மே மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் பிரேம் ஆனந்த் கூறும்போது, ‘‘டிடி ரிட்டர்ன்ஸ் பெரும் வெற்றி பெற்றதால் அதன் அடுத்த பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக செய்தோம். இந்த படத்தின் கதை சொகுசு கப்பலில் நடக்கிறது. இதுவும் திரில் நிறைந்த காமெடி படமாக இருக்கும்’’ என்றார்.
