Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்வதேச படத்துடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்

சென்னை: தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘மாமதுர’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச நெட்பிளிக்ஸ் திரைப்படமான ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’-ல் இடம்பெற்றுள்ளன.

உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்து உலகளவில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அது சர்வதேச நெட்பிளிக்ஸ் தளத்தின் வாயிலாக மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை சென்றடைந்துள்ளது.