Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்: நாக சைதன்யா உருக்கம்

ஐதராபாத்: நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த ஜோடிக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், நாக சைதன்யா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், ‘இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘இப்போது அவரை பார்த்தேன் என்றால் ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன். காரணம், அவர் மிகவும் உடைந்து போயிருக்கிறார்’ என்றார். முன்னதாக சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சமந்தாவின் கடைசி புகைப்படத்தையும் சைதன்யா நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.