Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செய்! செய்யாதே! விமர்சனம்...

மதுரையிலுள்ள அரசு மருத்துவமனை டீன் டாக்டர் எஸ்.ராஜா, ஏழைகளுக்கு மிகவும் நேர்மையான முறையில் மட்டுமே சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். டாக்டராக இருக்கும் அவரது மனைவி தர்ஷினி ரெட்டி, லோன் வாங்கி பெண்கள் சிறப்பு மருத்துவமனை தொடங்கி, சிகிச்சை என்ற பெயரில் பணத்தை கொள்ளை அடிக்கிறார். டாக்ட ரான அவர்களின் மகன் குரு விஜய், தன்னுடன் படிக்கும் தபிதா குணரத்னேவை காதலிக்கிறார்.

டாக்டர் எஸ்.ராஜாவுக்கு எதிராக அவரது மனைவி, மகன் செயல்படுகையில், பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

இப்படத்தை எழுதி இயக்கி இயல்பாக நடித்துள்ள டாக்டர் எஸ்.ராஜா, காமெடியிலும் குறை வைக்கவில்லை. சதி வேலைகளில் குரு விஜய் தனது திறமையை காட்ட, அவரது காதலி தபிதா குணரத்னே அளவாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, மோனிகா பிரீத்தி.வி, சிதம்பரம் பிடிகே, பிரதிக்‌ஷா மனோ பிரசாந்த் உள்பட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சராக, பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ளார். பாடல்களுக்கு டாக்டர் எஸ்.ராஜா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாடு பி.வாசு, எடிட்டர் ராஜா முகமது ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கவை. மருத்துவத்துறையில் மாஃபியா கும்பல் நடத்தும் சட்டவிரோத செயல்களை அதிரடியாக சொன்ன டாக்டர் எஸ்.ராஜா, அதை திரைமொழியில் விறுவிறுப்பாக சொல்வதற்கு தடுமாறியுள்ளார். படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.