Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா திட்டவட்டம்

சென்னை: கடந்த 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். கடந்த 2019 மற்றும் 2021ல் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் கூறுகையில், ‘2ம் பாகம் உருவாக்கப்படுவது எனது கையில் மட்டுமில்லை, அனைவரும் இணைய வேண்டும்’ என்றார்.

ஆண்ட்ரியா கூறும்போது, ‘இப்படத்தில் நடித்த அனுபவங்களை எப்போதுமே மறக்க முடியாது. 200 நாட்களுக்கு மேல் நடந்திருந்த படப்பிடிப்பில் அனைவரும் கஷ்டப்பட்டோம். இப்படத்துக்கு பிறகு எந்த படத்தில் நான் நடித்தாலும் சுலபமாக இருந்தது. செல்வராகவனுடன் பணியாற்றுவது ரொம்ப கஷ்டம். அதனால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ 2வது பாகத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என்றார்.