வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறதா நடிகர் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 திரைப்படம்?
இந்நிலையில் "சந்திரமுகி" திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பி.வாசு முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்பட பலர் நடிக்கின்றனர்.
'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரமுகி2 படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
