Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஷாருக்கானின் ‘கிங்’ பர்ஸ்ட் சிங்கிள்

ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ என்ற பான் இந்தியா படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இதில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். இப்பாடலில் அர்ஜித் சிங்கின் அற்புதமான குரலும், எட் ஷீரனின் தனித்துவமான ராப் இசை பாணியும் இணைந்துள்ளது. ‘கிங்’ படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலான இப்பாடல், ஷாருக்கானின் வசனத்துடன் தொடங்குகிறது. ‘நான் கொலையாளி அல்ல, காதலன். என் இலக்கு என் காதலி.

இதயத்தை துளைக்காதவன் என்ன காதலன்?’ என்ற வசனம், அவரது கேரக்டரின் தன்மையை வெளிப்படுத்துகிறது. மதுபந்தி பாக்ஸியின் மந்திரக்குரலும் இப்பாடலை மெருகேற்றுகிறது. சச்சின், ஜிகர் இசையில் குமார் பாடல் எழுதியுள்ளார். பியூஷ், ஷாஜியாவின் நடனக்காட்சி அமைத்துள்ளனர். ‘இந்தமுறை இதயத்தில் நெருப்பு பற்றிக்கொண்டது. உலகத்தையே எரித்துவிடாமல் நான் ஓயமாட்டேன்’ என்ற உரையாடல், இப்படத்தின் தீவிரமான மற்றும் கம்பீரமான சூழ்நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட், மார்பிளிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.