Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முஃபாசாவில் இணைந்த ஷாருக்கான்

முஃபாசாவில் தனது குரல் மூலம் இணைந்திருக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்குக்குத் திரைப்படம், முஃபாசா: தி லயன் கிங், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அதன் ஒளிரும் நட்சத்திரக் குரல் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திழுத்துள்ளது . இதன் இந்தி பதிப்பில் முஃபாசாவுக்கு குரல் கொடுக்கும் ஷாருக்கான், வனங்களின் ராஜாவாக வெற்றிகரமாக வளர்ச்சி காணும் முஃபாஸாவின் மன எழுச்சியூட்டும் பயணத்தோடு ஒன்றிணைந்துள்ளார்.

இப்படத்துக்கு அடையாளச் சின்னமாக விளங்கும் ஷாருக்கானின் குரல்வளத்தால் இந்த பழம்பெரும் புகழ் பெற்ற வன ராஜா உயிர்பெற்றெழுந்து மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கும் அற்புதமான காட்சியை காணத் தயாராகும்படி படக்குழு தெரிவித்துள்ளது. டிஸ்னியின் ‘முஃபாசா: தி லயன் கிங்’ முஃபாசா என்ற தன்னந்தனியாக விடப்பட்ட சிங்கக் குட்டியை அறிமுகப்படுத்துகிறது, பரிவு காட்டும் டக்கா என்ற சிங்கம் - அரச குடும்ப வாரிசு - மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற ஒரு விதிவிலக்கான குழுவோடு இணைந்த அவர்களின் விரிவான ஒரு நீண்ட நெடிய பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது. இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 2024 டிசம்பர் 20ம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.