Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஷாலினி பாண்டேயின் ஆபாச வீடியோ வைரல்: டீப்ஃபேக் என கண்ணீர்

சென்னை: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இந்தியில் நடித்த அவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘100% காதல்’, ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’, தனுஷ் இயக்கி, நடித்த ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்தார். கடந்த சில நாட்களாக ஷாலினி பாண்டேவின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வந்தது. அவை அனைத்தும் தனது பெயர் மற்றும் தோற்றத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஏஐ வீடியோ என்று ஷாலினி பாண்டே விளக்கம் அளித்து கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ‘தொழில்நுட்பம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவதை பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது, இதுபோன்ற துஷ்பிரயோகத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பெண்களை குறிவைத்து இதுபோன்ற போலியான மற்றும் ஆபாசமான வீடியோக்களை ஏஐ மூலம் உருவாக்கி பரப்புவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அவற்றை சமூக வலைதளங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

இது டீப்ஃபேக் ஆகும்’ என கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ உண்மை என நம்பிய ரசிகர்கள், ஷாலினிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.