நடிகர் சிவ்ராஜ்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட், நடிகர் சிவ்ராஜ்குமார், கீதா சிவ்ராஜ்குமார், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சிவ்ராஜ்குமாரின் மாறுபட்ட தோற்றம் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
சிறப்பான கூட்டணியுடன் உருவாகி வரும் இப்படம், பான் இந்தியா அளவில் ரசிகர்களை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் படத்தின் அடுத்தகட்ட விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளன.
