Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை: இந்திய சினிமாவில் சாம் சி.எஸ். புது முயற்சி

சென்னை: அஸ்வின்குமார் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படம் ‘மகா அவதார் நரசிம்மா’. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. ‘மகா அவதார் பரசுராம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்காக சாம் சி.எஸ். வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த music-first அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும்.

இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வெளிக்கொண்டு வர முடியும். அதன் பிறகே படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு வெளிநாட்டு இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 250 பேர் இணைந்து சாம் சி.எஸ். தலைமையில் இந்த படத்துக்காக பணியாற்ற உள்ளனர்.