Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்ரேயா கல்ராவின் கன்னத்தில் அத்துமீறி முத்தமிட்ட நடிகர்: பாலிவுட்டில் பலத்த சர்ச்சை

மும்பை: இந்தி டி.வி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராம் கபூர் (51), சமீபத்தில் நடந்த டி.வி நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடன் நடித்த இளம் நடிகை ஸ்ரேயா கல்ராவின் கன்னத்தில் அத்துமீறி முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரேயா கல்ரா, இந்நிகழ்ச்சியில் ராம் கபூர் தனது தனிப்பட்ட எல்லைகளை மீறி நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பலத்த சர்ச்சையையும், கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து ராம் கபூர் கூறுகையில், ‘என்னிடம் ஸ்ரேயா கல்ரா பலமுறை பேசியுள்ளார். தவறான எண்ணத்தில் தான் எந்த விஷயத்தையும் தெரிவிக்கவில்லை என்று சொன்னார். என்னிடம் எந்த தவறும் இல்லை என்று அவர் தெளிவாக சொல்லிவிட்டார்.

எனது திரையுலக வாழ்க்கையில், அனைவருடனும் நான் எப்போதும் இயல்பாக பேசிப் பழகும் குணம் கொண்டவன். என்னை பற்றி யார் என்ன திரித்து பேசினாலும் கவலைப்பட மாட்டேன். கடந்த 27 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எந்த நடிகையும், என்மீது ஒரு புகார் கூட சொன்னது இல்லை. ஸ்ரேயா கல்ரா தனது கோபத்தை கட்டுப்படுத்தவும், அமைதியாக இருக்கவும் பக்குவப்பட வேண்டும்’ என்றார்.