Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சித்தார்த் இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் 26வது படம்

சென்னை: ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் பிரமாண்டமான படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். புதியவர் சித்தார்த் எழுதி இயக்குகிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது விக்ரம் பிரபு நடிக்கும் 26வது படமாகும். தங்க நகை மார்க்கெட் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லராக உருவாக்கப்படுகிறது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.

‘டாணாக்காரன்’, ‘சிறை’ போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபு தேர்வு செய்துள்ள இப்படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அருள் மோசஸ் எடிட்டிங் செய்கிறார். தற்போது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் ரவி மோகன் நடிக்கும் படமும், ஆகாஷ் முரளி நடிக்கும் படமும் உருவாகி வருகிறது.