Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

SILENT: விமர்சனம்

ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் பின்னணியில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறது போலீஸ். ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட். அந்த குற்றவாளியை போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பது தான் சைலண்ட் திரைப்படம். என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருக்கிறது. இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார்.

திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே நல்லபடியாக எழுதியுள்ளார் சமய முரளி. போலீஸ் கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு சிறப்பு. இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் கேரக்டரில் இயக்குநர் கணேஷா பாண்டியே நடித்துள்ளார். நடிப்பில் மிளிர்கிறார். மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள். படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை சரி செய்து, இன்னும் மெருகேற்றியிருக்கலாம். சேயோன் முரளி ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. எடிட்டிங் ஓகே. பின்னணி இசையை சமயமுரளி திறம்பட செய்திருக்கிறார்.