Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.30 கோடியில் வீடு வாங்கிய பாடகி

முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வரும் ஸ்ரேயா கோஷல், திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த எல்லா வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார். பாரதிராஜா தமிழில் இயக்குவதாக இருந்த ஒரு படத்துக்கு கேட்டபோது, நடிப்பில் தனக்கு ஆர்வம் இல்லை என்று மறுத்துவிட்ட ஸ்ரேயா கோஷல், கடந்த 23 வருடங்களாக இசைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழிலும் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வருகிறார். தற்போது தெற்கு மும்பையில் வொர்லி பகுதியில், சுமார் 29.7 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுகுறித்த தகவல், பத்திரப்பதிவு துறையில் இருந்து சோஷியல் மீடியாவில் கசிந்தது. 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட மற்றும் 2,750 சதுர அடி கட்டுமானம் கொண்ட, 3 கார் பார்க்கிங் வசதி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை ஸ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார். இதற்காக 1.78 கோடி ரூபாய் முத்திரைக்கட்டணம் செலுத்தியுள்ளார்.