Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாடகி சுஜாதாவுக்கு மகளிர் தினத்தில் விருது

சென்னை: தமிழ், இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, தூய்மைப் பணியாளர் பத்மா இணைந்து இந்த ஆண்டிற்கான சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். கடந்த 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து, அரசு பள்ளிகளை தத்தெடுத்து பல்வேறு சேவைகள் செய்து வரும் சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி சுஜாதா ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் இந்தியாவின் புள்ளியியல் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனரும், கணினி விஞ்ஞானியுமான சங்கமித்ரா பந்தோபாத்யாய் சிறந்த ஆளுமைக்கான விருது பெறுகிறார். பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்ததுடன், அர்ஜூனா விருது வென்ற வீராங்கனையான துளசிமதி முருகேசனுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் பலர் மார்ச் 8ம் தேதி நடைபெறும் விழாவில் விருது பெற உள்ளனர்.