சென்னை: சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நிருபர்களிடம் கூறியது: லெனின் பாண்டியன் படத்தில் ஒரு நடிகனாக, என் திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்பு இருந்தது. அதிகாரத்துக்கு எதிராக சாதாரண மனிதர்கள் 2 பேர் போராடுவதுதான் படத்தின் கதை. இதில் கங்கை அமரன், ரோஜா ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவத்தைத் தந்தது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
அதற்காக நிஜமான போலீஸார் எப்படி இருப்பார்கள் என்பதை மதுரையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்குசென்று நாள் முழுவதும் அமர்ந்து கவனித்தேன். அது கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்தது. மதுரை அருகே நடக்கும் கதை என்பதால் உடல் இயல்பாக வேண்டும் என்பதற்காக சில நாட்கள் வெயிலில் நின்றேன். மதுரை ஸ்லாங்கில் பேசப் பயிற்சி எடுத்தேன். இப்போது படத்தில் பார்க்கும் போது எனக்கு நானே வித்தியாசமானவனாகத் தெரிகிறேன். அடுத்து கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். விதவிதமான கதாபாத்திரங்களிலும் மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது.
