Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குளிர்பானத்தில் உயிருள்ள கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு ஆணையரிடம் ஸ்வேதா புகார்

மும்பை: நாடு முழுவதும் செல்போன் செயலிகளின் மூலம் வீடுகளுக்கு நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யும் வணிக முறை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், ஆன்லைன் டெலிவரி பார்சல்களில் பூச்சிகள் மற்றும் அசுத்தமான பொருட்கள் வருவது, வாடிக்கையாளர்களிடையே உணவு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி, ஆன்லைன் மளிகை டெலிவரி செயலியின் மூலம் தனது வீட்டுக்கு குளிர்பானங்களை ஆர்டர் செய்து வாங்கினார். அந்த பார்சலை திறந்து பார்த்தபோது, குளிர்பான பாட்டில்களுடன் சேர்த்து உயிருள்ள கரப்பான் பூச்சி பார்சலில் இருந்து வெளியே வந்தது. பின் வீட்டுக்குள் ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர், ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டேவை சோஷியல் மீடியா பதிவில் டேக் செய்துள்ள ஸ்வேதா திவாரி, ‘இதுபோன்ற அலட்சியமான செயல்கள் மக்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.