Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தபு மீது பொறாமைப்பட்ட சோனாலி

கடந்த 1997ல் ‘மாச்சிஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் தபு. அதே ஆண்டில் ‘தாயரா’ என்ற இந்திப் படத்தில் நடித்த சோனாலி குல்கர்னியும் தேசிய விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சோனாலி குல்கர்னி அளித்துள்ள பேட்டியில், ‘அப்போது விருதுகளை வென்ற அனைவரையும் பார்த்து நான் பொறாமைப்பட்டேன். ஒவ்வொரு ஆண்டும் எனது படங்கள் தேசிய விருதின் இறுதி சுற்றுவரை சென்றன. ஆனால், கடைசியில் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. அந்த காலத்தில் தேசிய விருது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மற்ற விருதுகளை வென்றாலும், கிடைக்காத ஒன்றின் மீதுதான் அதிக ஏக்கம் இருக்கும். தபு மீது இருந்த கோபம் மற்றும் பொறாமையால் ‘மாச்சிஸ்’ படத்தை பார்த்தேன். அதில் அவரது சிறந்த நடிப்பு, என்னுள் இருந்த பொறாமையை மறைத்துவிட்டது’ என்றார். கடந்த 2002ல் ‘சைத்ரா’ என்ற மராத்திய குறும்படத்துக்காக, சிறப்பு ஜூரி பிரிவில் தேசிய விருது வென்றார் சோனாலி குல்கர்னி. இவர், தமிழில் வெளியான ‘மே மாதம்’ என்ற படத்தில் நடித்தவர். அதில், ‘மார்கழி பூவே...’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.