Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சோனி பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் 13 பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்கள்!

ஹாலிவுட் திரையுலகில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக திகழும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் , 2026 ஆம் ஆண்டிற்கான தனது பிரம்மாண்ட வெளியீட்டுப் பட்டியலில் 13 வித்தியாசமான திரைப்படங்களை உலக ரசிகர்களுக்கு அளிக்கத் தயாராகியுள்ளது. பல்வேறு ஜானர்களைச் சேர்ந்த இந்த படங்கள், வர்த்தக ரீதியிலும் கலை ரீதியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. சூப்பர் ஹீரோ உலகம் முதல் அறிவியல் கதை, அதிரடி, திகில், அனிமேஷன், குடும்பக் கதை என கலவையான கதைகளைக் கொடுக்க இருக்கிறது.

மார்வெல் உலகின் மிகப் பிரபலமான கதாபாத்திரமான ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே, உலகளாவிய ரசிகர்கள் கொண்ட ஹீ-மேன் கதாபாத்திரத்தை லைவ்-ஆக்ஷனில் காணும் விதமாக மாஸ்டர் ஆஃப் யுனிவர்ஸ், குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் ஜுமாஞ்சி 3, உள்ளிட்ட படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. முந்தைய பாகங்கள் போலவே நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த சாகச அனுபவமாக இந்தப் படங்களும் இருக்கும். குழந்தைகள் மற்றும் இளம் ரசிகர்களை குறிவைத்து உருவாகும் அனிமேஷன் படம் கோட் GOAT இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.

அறிவியல் கதை ரசிகர்களுக்காக ப்ரோஜெக்ட் ஹெய்ல் மேரி, அதே நேரத்தில் குற்ற உலகின் உளவியல் பின்னணியை ஆராயும் த்ரில்லராக கிடைம் 101 உருவாகியுள்ளது. மர்மம் மற்றும் விசாரணை கலந்த கதை சொல்லும் முறையில் த ஷீப் டிடெக்டிவ்ஸ், படங்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். உளவியல் த்ரில்லர் வகையில் வேரிடி சமூக ஊடக உலகின் தாக்கங்களை மையமாகக் கொண்ட தி சோசியல் ரெக்கானிங், மர்மம் மற்றும் அரசியல் பின்னணியுடன் ஆர்சாஞ்சல் படமும் உருவாகி வருகிறது.

ஹாரர் படங்களில் மிக முக்கியமான இன்சிடியஸ்: தி ப்ளீடிங் வோர்ல்ட் , ஜோம்பிகள் வேட்டை பட சீரிஸ் ரெசிடெண்ட் ஈவில், ஹாரர் ரசிகர்களின் ஃபேவரைட் ஈவிள் டெட், தொடர்ந்து 28 இயர்ஸ் லேட்டர்: தி போன் டிம்பிள், உள்ளிட்ட பாகங்களும் வெளியாகின்றன.