Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சவுந்தர்யன் மகன் அமர்கீத்

சென்னை: இசை அமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர்கீத், வரும் 23ம் தேதி ரிலீசாகும் ‘மையல்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ சேது நடித்துள்ளார். பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் எனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து பாராட்டினர்.

1ம் வகுப்பு படிக்கும் போது கீ-போர்டு வாசித்தேன். பிறகு நானாகவே மென்பொருள் மூலம் இசை அமைத்தேன். கல்லூரி ஒன்றில் ஒலி சம்பந்தமான படிப்பை முடித்தேன். பிறகு குறும்படங்கள், வெப்தொடர்கள், ஆவணப்படங்களுக்கு இசை அமைத்த அனுபவத்திலேயே ‘மையல்’ என்ற படத்தின் மூலமாக நான் அறிமுகமாகிறேன்.