சென்னை: சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு பாயல் ராஜ்புத் அணிந்து வந்த ஆடை மற்றும் அவரது உடல் தோற்றத்தை வைத்து, சிலர் சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்களைப் பகிர்ந்து ஆபாசமான கருத்துகளையும், கேவலமான எமோஜிக்களையும் பதிவிட்டு வந்தனர். இதற்கு எதிராக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘‘இப்படிப்பட்ட வீடியோக்களைப் பகிர்ந்து, என் உடலைப் பற்றி மிகவும் கேவலமான மற்றும் ஆபாசமான கருத்துக்களை வெளியிடும் அனைவருக்கும் முதலில் கண்டனம்.
என் உடல், என் அளவு, என் பெருமை. இது உங்கள் விவாதத்திற்கோ, உங்கள் கருத்துக்களுக்கோ அல்லது உங்கள் ஆபாசப் பேச்சுக்கோ உரிய தளம் கிடையாது. தயவுசெய்து உங்கள் எல்லையை உணர்ந்து, உங்கள் சொந்த வேலையை மட்டும் பாருங்கள்’’ எனத் தன்னை ட்ரோல் செய்தவர்களை எச்சரித்துள்ளார்.
