Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முதுகெலும்பு பாதிப்பு: 2 வருடம் கழித்து நடிக்க வந்த வாசி

சென்னை: ‘மத்தாப்பு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஜி.எஸ். வாசி. இவர் பாடல் எழுதி, பாடி, நடனமாடி, நடித்து, இயக்கி இருக்கும் ‘அம்பானி டா’ எனும் சுயாதீன வீடியோ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ஆனந்த் இசையமைத்திருக்கிறார். வாசி கூறும்போது, ‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் 2012ம் ஆண்டில் வெளியான ‘மத்தாப்பு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து என் திரை பயணத்தை தொடங்கினேன்.

அதனைத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி முதுகெலும்பில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வருடம் வீட்டிலேயே முடங்கினேன். முதலில் உங்களை நீங்களே நம்புங்கள். மற்றவற்றை இந்த பிரபஞ்சம் கவனித்துக் கொள்ளும்’ என்ற விசயத்தை முன்வைத்து, ‘அம்பானி டா’ எனும் இந்த சுயாதீன வீடியோ இசை ஆல்பத்தை உருவாக்கி நடிப்புக்கு திரும்பியுள்ளேன். இந்தப் பாடல் தன்னம்பிக்கை, இலட்சியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்’’ என்றார்.