Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்டாண்ட் அப் காமெடியில் மாயா கிருஷ்ணன்

சென்னை: நடிகை, கூத்து கலைஞரான மாயா எஸ். கிருஷ்ணன், ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார். மேலும் ‘தொடரி’, ‘2.0’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராக புது அவதாரம் எடுத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, பெரும் வரவேற்பை பெற்றது. மஞ்சுளா டீச்சர் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரசாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து பேசும் அவரது டிஜிட்டல் வீடியோக்களும் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிப்பு மற்றும் திரை அனுபவங்களுடன், கூத்து மற்றும் மேடை நிகழ்ச்சி கலைகளில் பெற்ற அனுபவத்தையும் கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடி செய்திருக்கிறார் மாயா கிருஷ்ணன். முதல் முறையாக இதுபோல் நிகழ்ச்சி நடத்தியதற்கு ரசிகர்களிடையே பலத்த ஆதரவு கிடைத்ததால் இதை தொடரவும் அவர் முடிவு செய்துள்ளார்.