Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கதை போதும் ஸ்டார் தேவையில்லை: ஹாரிஸ் ஜெயராஜ் பேச்சு

சென்னை: மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்க, பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் ஏ.எல்.விஜய் எழுதி இயக்கியுள்ள படம், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

படக்குழுவினர் சார்பில், திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ள ஹாரிஸ் ஜெயராஜூக்கு பாராட்டு விழா நடந்தது. இயக்குனர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் பேசியதாவது:

கதைக்களம் வலுவாக அமைந்துவிட்டால், எந்த ஸ்டாரின் உதவியும் தேவையில்லை. அப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும். முன்னணி ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்ஸ் இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால், எல்லாமே காணாமல் போய்விடும். இதுவரை 65 பாடகர், பாடகிகளை அறிமுகம் செய்துள்ளேன். ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மலையாள இயக்குனர் வினீத் னிவாசனை பாடகராக அறிமுகப்படுத்துகிறேன்.