சென்னை: வி.ஜி. சினி புரோடக்சன்ஸ் நா. வெங்கடேசன் தயாரிக்கும் திரைப்படம் ‘விசாரணை கைதி’. ஒரு கிராமத்தில் சுருளி என்கிற இளைஞன் வாழ்ந்து வருகிறான். அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் நிகழ்வால் அவன் வாழ்க்கை பாதை மாறுகிறது. அதன் பின்னணியில் நடப்பதுதான் கதை. சுருளி என்ற கதாபாத்திரத்தில் விகடன் என்பவர் மிகவும் கச்சிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். காவல்துறையின் கம்பீரம் சிறிதும் குறையாமல் உன்னிகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
மேலும் பலர் நடித்துள்ளனர். எடிட்டர் - சதீஷ்குமார் இசை - நரேஷ் விஜய். கேமராமேன் - சந்திரன் சாமி. பின்னணி இசை - பொன் பிரசாந்த். பாடல்கள் - கலைக்குமார் கோ சரவணன். அனுராதா ஸ்ரீராம், பிரசன்னா, சிபி, ஸ்ரீனிவாஸ், தீபிகா வரதராஜன் இவர்கள் இந்த படத்தில்பாடல்களை பாடி இருக்கிறார்கள் muoooum மிடியா வில் இத்திரைபடத்தை சிறப்பாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. எஸ்.ஆர். மணிகண்டன் எழுதி இயக்கியுள்ளார்.
