ஆதி சாய்குமார் நடிப்பில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகிறது. Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். நவரசன் எழுதி இயக்குகிறார்.
1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில், தெய்வீகம், ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் மர்மம் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை நினைவூட்டும் வகையில் தெய்வீக மர்மங்களும் பரபரப்பான திருப்பங்களும் நிறைந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது.
‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்குப் பணியாற்றிய இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது
