Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பனி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோஜு ஜார்ஜின் பரிபாடி: மல்லுவுட்டில் யுவன் ஷங்கர் ராஜா அறிமுகம்

சென்னை: ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரிசூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி மற்றும் சவுண்ட் டிசைனர் அஜயன் அதத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.‘மாலிகாபுரம்’, ‘2018’, ‘ரேகாசித்திரம்’, ‘ஆடு 3’ போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய காவ்யா ஃபிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.