Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுடலைமாடன் திருவிழா கதை மாடன்

சென்னை: நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இருக்கும் சுடலை மாடன் கோயிலில் திருவிழா நடத்தப்படாமல் இருக்கிறது. அதை விமரிசையாக நடத்த வேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்தில் களத்தில் குதிக்கும் ஹீரோ மற்றும் அவருக்கு உதவும் காதலி சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் படமாக ‘மாடன்’ உருவாகியுள்ளது. தெய்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், முன்னாள் கப்பல் கேப்டன் சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரித்துள்ளார்.

கோகுல் கவுதம், ஷார்மிஷா, டாக்டர் சூரியநாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி, ஸ்ரீபிரியா, திருநங்கை ரஸ்மிதா நடித் துள்ளனர். ஒரு பாடலையும், வசனங்களையும் நெய்வேலி பாரதிகுமார் எழுதியுள்ளார். சின்ராஜ் ராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார், விபின்.ஆர் இசை அமைத்துள்ளார். வே.ராமசாமி, கார்த்திக் கிருஷ்ணன் பாடல்கள் எழுதியுள்ளனர். இரா.தங்கபாண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். திருநெல்வேலி பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் விரைவில் வெளியாகிறது.