Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் ஜெயிலர் 2 அக்டோபர் 15ல் ரிலீஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் எழுதி, இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது. முதல் பாகத்தில் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படம் வரும் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது. இதனால் ரசிகர்களிடையே பலத்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.