சுரேஷ் ரவி, யோகி பாபு படப்பிடிப்பு முடிவடைந்தது
சென்னை: பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன்.பி, ராஜபாண்டியன்.பி, டேங்கி ஆகியோர் தயாரிப்பில் சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு இந்நிறுவனம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தை தயாரித்தது. தற்போது உருவாகியுள்ள இன்னும் பெயரிடப்படாத படத்தில் இன்றைய நகரத்து வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் கலந்து, சமூக அக்கறை கொண்ட காமெடி டிராமாவாக கே.பாலையா எழுதி இயக்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல.ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்புக்குட்டி, ஆதிரா, கு.ஞானசம்பந்தம் நடித்துள்ளனர். மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். தினேஷ் போனு ராஜ் எடிட்டிங் செய்ய, சி.எஸ்.பாலசந்தர் அரங்கம் அமைத்துள்ளார்.
