Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூர்யா-ஜான்வி கபூரின் கர்ணா படம் டிராப்பா? இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் விளக்கம்

மும்பை: சூர்யா, ஜான்வி கபூர் நடிக்கும் ‘கர்ணா’ படம் கைவிடப்படவில்லை என அதன் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியில் ஆமிர்கான் நடித்த ‘ரங்தே பசந்தி’ படத்தை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவர் பல படங்களை இந்தியில் இயக்கியவர். சூர்யா, ஜான்வி கபூர் நடிப்பில் ‘கர்ணா’ என்ற பெயரில் பான் இந்தியா படத்தை உருவாக்க உள்ளதாக 3 ஆண்டுகளுக்கு முன் இவர் அறிவித்தார். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நேற்று கூறும்போது, ‘‘கடந்த 6 வருடமாக ‘கர்ணா’ படத்துக்கான ஆயத்த பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. திரைக்கதை முழுமை அடைந்துவிட்டது. மகாபாரத கதையில் இருந்து சில முக்கிய பகுதிகளை எடுத்து இதன் கதையை எழுதியுள்ளேன். இவை இரு பாகங்களாக உருவாகும். சூர்யா, ஜான்வி கபூர் நடிப்பது உறுதி. ஏ.ஆர்.ரஹ்மான் முன்பே ஓரிரு பாடலுக்கு இசையமைத்துவிட்டார்’’ என்றார்.