Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூர்யா ஜோடியானார் கயாடு லோஹர்

சென்னை: சூர்யாவின் புதிய படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க, த.செ.ஞானவேல் எழுதி இயக்குகிறார். ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா நடிக்கும் படத்துக்கு சாய் அப்யங்கர் இசை அமைக்கிறார். சூர்யா ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு த.செ.ஞானவேல், சூர்யா கூட்டணி மீண்டும் இணைவதால், ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கர்நாடகாவை சேர்ந்த ஹோம்பாலே பிலிம்ஸ், முன்னதாக ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘சலார்’,‘காந்தாரா’, ‘காந்தாரா: சாப்டர்1’ ஆகிய மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்த பான் இந்தியா படங்களை தயாரித்து இருந்தது.