Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடுரோட்டில் மொட்டை அடித்துக் கொள்வேன்: சுவேதா லட்சுமணன் பரபரப்பு பேச்சு

ஐதராபாத்: என் படம் ஓடாவிட்டால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொள்வேன் என நடிகை சுவேதா லட்சுமணன் கூறியுள்ளார். ‘சஹா லைஃப் ஆஃப் சஞ்சு’ தெலுங்கு படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி ரிலீசாகிறது. இதில் சுவேதா லட்சுமணன் ஹீரோயினாக நடித்துள்ளார். பொதுவாகப் பட விழாக்களில் நடிகர்கள் ‘எங்கள் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்’ என்றுதான் கேட்பார்கள். ஆனால் இப்பட விழாவில் சுவேதா, ‘நான் ரசிகர்களிடம் படத்தைப் பார்க்கும்படி கெஞ்சப் போவதில்லை, மாறாக அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்’ என்று கூறினார். ‘‘தியேட்டருக்குள் சென்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒருவர் கூட ஏமாற்றமடைய மாட்டார்கள்.

அப்படி யாராவது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்ததாகக் கூறினால், நான் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற அமீர்பேட்டை சென்டரில் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு என் தலையை முழுமையாக மொட்டை அடித்துக் கொள்கிறேன்’’ என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார். தங்களது படத்தின் கதை மற்றும் கன்டென்ட் மீது படக்குழுவினருக்கு இருக்கும் அசாத்திய நம்பிக்கையின் காரணமாகவே அவர் இந்த எல்லைக்குச் சென்று சவால் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.