Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குடும்பத்தை விமர்சித்த விவகாரம்; டாப்ஸி, கங்கனா கடும் மோதல்

மும்பை: முன்னணி நடிகைகள் டாப்ஸி, கங்கனா ரனவத் ஆகியோருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. டாப்ஸியை ‘பி-கிரேடு நடிகை’ மற்றும் ‘போலி தயாரிப்பின் மலிவான நகல்’ என்று கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அவரது குடும்பம், வளர்ப்பு குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில், ‘எனது வளர்ப்பு, பேச்சு மற்றும் அணுகுமுறைக்கு ஏற்பவே எனது கருத்துகள் இருக்கும். யார் எந்த பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். எனக்கு அரசியல் செய்யும் எண்ணம் இல்லை’ என்றார்.

டாப்ஸியின் இந்த பேட்டிக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த கங்கனா ரனவத், ‘தனது பி-கிரேடு படத்தை விளம்பரப்படுத்த ேபாலி தயாரிப்பின் மலிவான நகல் ஒருவர் கிளம்பியுள்ளார். அவர் எனது பெற்றோரையும், வளர்ப்பையும் இழிவுபடுத்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார். போலி தயாரிப்பின் மலிவான நகலாக இல்லாமல், ஒரு அசல் குழந்தையை அவரது பெற்றோரால் ஏன் உருவாக்க முடியவில்லை?’ என்று பதிவிட்டு, பிறகு அந்த பதிவை நீக்கிவிட்டார்.