Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர்

சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வெல்கம் டு வைல்ட்லைஃப்’ (Welcome to Wildlife) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’, தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த ‘நினு வீதனி நீ தானு நேனே’, சமீபத்தில் வெளியான ‘சிங்கிள்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமான பான் இந்தியா படமாக தயாராகிவரும் இந்த படத்தை கேவிகே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவராஜ்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர். போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு.