Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழில் டப்பிங் ஆகிறது பெத்லகேம் குடும்ப யூனிட்

சென்னை: மலையாளத்தில் ஹிட்டான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது. மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிரேமலு’ கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோஷி கதை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், பஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

நிவின் பாலி, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, விநய் ஃபோர்ட், ரோஷன் ஷாநவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரிந்தா, பார்வதி ஐயப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் நடித்துள்ளனர். அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் எடிட்டிங் செய்துள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கில் பியூச்சர் ரன்அப் பிலிம்ஸ் விநியோகிக்கிறது. பிரீமார்க் புரொடக்‌ஷன்ஸ் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.