Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழுக்கு வரும் கியாரா அத்வானி

சென்னை: இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பவர் கியாரா அத்வானி. மாடலிங் துறையில் இருந்த அவர், 2014ம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கபீர் சிங்’, ‘குட் நியூஸ்’, ‘ஷேர்ஷா’, ‘பூஃல் புல்லையா 2’ உள்பட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

நடிகர் சிதார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்த அவர் கடந்த ஆண்டு சாராயா மல்ஹோத்ரா என்ற மகளை பெற்றெடுத்தார். திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடிக்கும் கியாரா அத்வானி தற்போது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

தெலுங்கு படத்திலும் நடித்து வரும் கியாரா அத்வானி தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். தமிழ் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களிடம் அவர் கதை கேட்டு வருகிறார். அப்படி அவர் கேட்ட கதை ஒன்றுக்கு சம்மதம் சொல்லி இருக்கிறாராம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.