Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழக அரசு விருது பெரும் அங்கீகாரம்: சாம் சி.எஸ்

சென்னை: இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தன் தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் சி.எஸ், ‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, ஆர் டி எக்ஸ், புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் உருவாக்கிய த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசை, ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது.

இந்த விருது குறித்து சாம் சி.எஸ். கூறுகையில், “புரியாத புதிர் திரைப்படத்திற்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது பெரிய அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். இது என்னை மேலும் உற்சாகப்படுத்தும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் ‘புரியாத புதிர்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’. பாலிவுட் தொடங்கி இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட, பல முக்கியமான படைப்புகளில் சாம் சி.எஸ். பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக ரவிமோகனின் ’கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றுகிறார்.